மகிந்தவின் மேலதிக பாதுகாப்பு குறித்து ரணிலின் அறிவிப்பு

53

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்தால் அவரிற்கு மேலதிக பாதுகாப்பை வழங்க தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியவேளையே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் விஜயராம மாவத்தை மெதமுலான மாற்றும் கார்ல்டன் இல்லங்களிற்கு ஏற்கனவே விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளதால் விசேட அதிரடி படையினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக ரணி;ல் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் கருத்து தெரிவித்த தினேஸ் குணவர்த்தன முன்னாள் ஜனாதிபதிக்கான அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்துள்ளதால் அவரின் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டியுள்ளது என முக்கிய பிரமுகர்களி;ன் பாதுகாப்பிற்கான தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE