சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் தமது பதவியை ராஜினாமா செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன்.
தொழிலாளர்களின் சம்பளங்கள் ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படாவிட்டால் எதிர்வரும் 30ஆம் திகதி, தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவு தினமன்று எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன்.
மக்களுடன் மக்களாக நின்று சம்பளத்தைப் பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்தை முன்னெடுப்பேன். எந்தவிதமான போராட்டத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.