ஹரி- மேகன் சென்ற விமானம் தரையிறங்குவதில் சிக்கல்: விமானியின் வித்தியாசமான ரெஸ்பான்ஸ்

52

சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் சென்ற விமானம் ஒன்று சிட்னி விமான ஓடுபாதையில் இறங்கச் சென்றபோது தவிர்க்க முடியாத ஒரு காரணத்தால் தரையிறங்க முடியாமல் போனது.

ஹரி – மேகன் சுற்றுப்பயணத்தை படம் பிடிக்கும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் அந்த சம்பவத்தைக் குறித்து தகவல் வெளியிட்டுள்ளதோடு, அது தொடர்பான ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் சென்ற விமானம் சிட்னி விமான ஓடுபாதையில் இறங்கும்போது அதே ஓடுபாதையில் இன்னொரு விமானம் நிற்பதைக் கண்டார் விமானி.

உடனே தானும் பதற்றப்படாமல், மற்றவர்களையும் பதற்றமடைய விடாமல் பாஸிட்டிவாக ஒரு கமெண்ட் அடித்தார் அவர்.

இளவரசருக்கும் இளவரசிக்கும் துறைமுகத்தை பார்ப்பதற்கு இன்னொரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது என அவர் கொடுத்த கமெண்ட் விமானத்தில்நிலவிய பதற்றமான சூழலையே மாற்றி சிரிக்க வைத்து விட்டது.

சில நிமிடங்களுக்குப் பின் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

 

 

 

 

SHARE