நான் மீண்டும் வருவேன் என்று எதிர்பார்கவில்ல வந்திட்டன்டா பிரதமர் மகிந்த ஆவேசம் முஸ்லிங்களுக்கு ஆப்புத்தான்

55

 

இலங்கை_அரசியலில்_திடீர்_திருப்பம்_பிரதமரானார்_மகிந்த_ராஜபக்சே

இலங்கை அரசியலிலும் அரசாங்கத்திலும் திடீர் திருப்பம் ஏற்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினார். இதனை அடுத்து, அந்த பதவியில் மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார்

 

இலங்கையில் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி ஆட்சி செய்து வந்தது. இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவர் மைத்திபால சிறீசேனா அதிபராக இருந்து வருகிறார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக இருந்து வந்தார். இந்நிலையில், ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி இன்று தீடீரென உடைந்தது.

இதனை அடுத்து, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார். இலங்கை சுதந்திரா கட்சியின் முன்னாள் தலைவராகவும் முன்னாள் அதிபராகவும் இருந்த மகிந்த ராஜபக்சே புதிய பிரதமராக இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். அதிபர் மைத்திபால சிறீசேனா முன்னிலையில் ராஜபக்சே அவர் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டார்.

இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா என்ற கட்சியை வழிநடத்திய ராஜபக்சே, கடந்த உள்ளாட்சி தேர்தலில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசியலில் குழப்பம்! ரணிலின் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

சமகால அரசாங்கத்தின் பிரதமர் தானே என ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று மாலை சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் புதிய பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொண்ட நிலையிலேயே தேசிய அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தானே நாட்டின் பிரதமர் என அறிவித்திருக்கின்றார்.

மஹிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவிப் பிரமாணம் அரசியல் யாப்புக்கு முரணானது என்றும் ரணில் குற்றம்சாட்டியிருக்கின்றார். சிறிலங்கா நாடாளுமன்றில் பெரும்பான்மையினரின் ஆதரவு தனக்கே இருப்பதாகவும் ரணில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பிரதமர் இல்லமான அலரி மாளிகைக்கு அழைத்து ரணில் மந்திராலோசணையும் நடத்திவருகின்றார்.

இந்த நிலையில் இன்னுமு் சற்று வேளையில் ஊடகங்களையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்திக்கவுள்ளார். இதன்போது தனது நிலைப்பாடு தொடர்பிலும், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடர்பிலும் ஊடகங்கள் ஊடாக நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்படும் தகவல்களை அறிந்துகொள்ள வேண்டுமானால் IBCTAMIL.COMஎன்ற எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

அலரி மாளிகையில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் உடனுக்குடன் தகவலக்ளை உங்களுக்கு எடுத:த வருவதற்காக அங்கு சென்றுள்ள எமது செய்தியாளர் சிரியான் சுஜித்தின் தகவல்களுக்கு அமைய, தற்போது அமைச்சர்களான சரத்பொன்சேகா உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் பலரும்அலரிமாளிகையில் குவிந்துள்ளனர்.

அதேவேளை அங்கு இடம்பெறும் ஏனைய நிகழ்வுகள் தொடர்பிலான புதிய தகவல்களையும் உடனுக்குடன் உங்களுக்கு எடுத்துவர நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதேவேளை மஹிந்த பிரதமராக பதவியேற்றது அரசியல் சதி என்று தெரிவித்துள்ள தேசிய அரசாங்கத்தின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, விரைவில் இந்த குழப்பத்திற்கு தீர்வு காணப்படும் என்றும் தனது டுவிட்டர் பதவியில் கூறியிருக்கின்றார்.

எவ்வாறாயினும் அரசியல் ரீதியாக பிளவுபட்டிருந்த மஹிந்த ராஜபக்சவுடன் மீண்டும் இணைந்து கொண்டுள்ள சிறிலங்கா அரச தலைவரான மைத்ரிபால சிறிசேன மஹிந்தவை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துவைத்ததை தலைநகர் கொழும்பிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மஹிந்தவின் ஆதரவாளர்கள் வெடி கொளுத்தி கொண்டாடி வருகின்றனர்.

தி சட்டத்திற்கு விரோதமான முறையில் மஹிந்த பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ரணில் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

SHARE