ஹக்கீம், ரிஷாத், மனோ அணிகள் ரணிலுக்கே பேராதரவு! 

92

 

ஹக்கீம், ரிஷாத், மனோ அணிகள் ரணிலுக்கே பேராதரவு!

நாட்டின் அரசமைப்பின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிக்கின்றார் எனவும், அவருக்கே தாம் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகள் கூட்டாகத் தெரிவித்துள்ளன.

அலரிமாளிகையில் தற்போது ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தற்போது நடைபெறுகின்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ஹக்கீம், அமைச்சர் ரிஷாத், அமைச்சர் மனோ ஆகியோர் பங்கேற்று மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

SHARE