இலங்கையில் இடம்பெற்றுள்ள பாரிய அரசியல் மாற்றத்தை முன்பே அறிந்திருந்த கருணா?!

45

 

இலங்கையில் இடம்பெற்றுள்ள பாரிய அரசியல் மாற்றத்தை முன்பே அறிந்திருந்த கருணா?!

அடுத்த மூன்று மாதங்களில் இலங்கை தீவில் திடீர் சம்பவங்கள் ஏற்படும் அப்போது தெரியும் என் அருமை புலம்பெயர் தமிழர்களுக்கு என கடந்த 31.08.2018 அன்று முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் (26.10.2018) மாலை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதி மைத்திரியால் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்யப்பட்டுள்ளார், இந்த சம்பவத்தால் தற்போதுவரை இலங்கை அரசியலில் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.

இந்த சூழ்நிலையில் குறித்த பிரதமர் நியமனத்தை விநாயகமூர்த்தி என்கின்ற கருணா முன்பே அறிந்திருந்தாரா? அல்லது அவர் கூறிய சம்பவங்கள் இனித்தான் நடைபெற போகின்றதா என்ற விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE