சைபீரியாவில் பெண் ஒருவர் தமது முன்னாள் கணவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு புகைப்படம் எடுத்து வெளியிட்ட அதிர்ச்சி சம்பவம்.

108

சைபீரியாவில் பெண் ஒருவர் தமது முன்னாள் கணவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு புகைப்படம் எடுத்து வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த புகைப்படங்களை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்த அவர், இப்போது சொல்லுங்கள் நான் மிருகத்தனமாக இருக்குறேனா என கேள்வி கேட்டுள்ளார்.

சைபீரியாவில் உள்ள Surgut நகரில் கடந்த அக்டோபர் மாதம் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தன்று மது போதையில் இருந்த இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் தமது முன்னாள் மனைவியை கழுத்தை நெரித்துக் கொல்ல முயற்சித்துள்ளார் அந்த நபர்.

இதனையடுத்து சமையலறை கத்தியால் தமது முன்னாள் கணவரை சரமாரியாக குத்தியுள்ளார் குறித்த பெண்மணி.

பின்னர், பொலிசாருக்கு தகவல் அளிக்காமல், ஆம்புலன்ஸ் சேவைக்கும் தெரிவிக்காமல், தமது மொபைலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தமது முன்னாள் கணவருடன் செல்பி எடுத்துள்ளார்.

பின்னர் தமது நண்பர்கள் அனைவருக்கும் அந்த புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார். குறித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் அப்போதே பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில்,

பொலிசார் உடனடியாக சம்பவயிடத்திற்கு விரைந்து அவரை கைது செய்துள்ளனர். கத்தியால் தாக்கப்பட்ட அந்த நபரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஓல்கா என்ற அந்த 25 வயது பெண்மணியை விசாரணைக்கு பின்னர் பொலிசார் விடுவித்துள்ளனர். மேலும் தமது குடியிருப்பில் இருந்து விசாரணை முடியும் மட்டும் வெளியே செல்வதில்லை எனவும் பொலிசாருக்கு உறுதி அளித்துள்ளார்.

இதனிடையே அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அந்த நபர் உயிர் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE