பெற்றோலிய ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

156
பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு அர்ஜுன் ரணதுங்க வருகை தந்ததையடுத்து இடம்பெற்ற அசம்பாவித நிலைமையைத் தொடர்ந்து பெற்றோலிய ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த பணிப்புறக்கணிப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் அர்ஜுன் ரணதுங்கவை, கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தயே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக பெற்றோலிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அர்ஜுன் ரணதுங்கவை, இன்று கைது செய்யாவிடின் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ளவர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவார்களெனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE