சுவாசிக்கும் முறையை மாற்றினால் காத்திருக்கும் மகிழ்ச்சி

188

மனிதர்கள் சுவாசிக்கும் போது பொதுவாக மூக்கு மற்றும் வாய் என்பவற்றினை பயன்படுத்துவார்கள்.

எனினும் வாயினைப் பயன்படுத்தி சுவாசிப்பதைக் காட்டிலும் தனியாக மூக்கினால் சுவாசித்தால் நினைவக ஒருங்கிணைப்பு ஆற்றல் அதிகரிக்கும் என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவீடனைச் சேர்ந்த Artin Arshamian என்பரின் தலைமையில் இடம்பெற்ற ஆய்விலேயே இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ் ஆய்வின்போது இரு வேறு குழுக்களாக பிரித்து ஒரு குழுவினை வாயினாலும், மற்றைய குழுவினை மூக்கினால் மாத்திரமும் சுவாசிக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.

பின்னர் பரீட்சித்து பார்க்கும்போது வாயினால் சுவாசித்தவர்களைக் காட்டிலும் மூக்கினால் சுவாசித்தவர்களின் மூளையின் செயற்பாடு சிறந்ததாகக் காணப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் சுண்டெலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றிலும் மூக்கினால் சுவாசிப்பதானது மிகுந்த ஆரோக்கியமானது என கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE