அடிக்கடி இடுப்பு வலி ஏற்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா?

140

பலரும் இடுப்பு வலி வந்தால் நீண்ட நேரம் அமர்வதால் தான் என சாதாரணமாக எண்ணி விட்டுவிடுவார்கள்.

ஆனால் அடிக்கடி இடுப்பு வலி வந்தால்அது நம் உடலில் உள்ள ஏதோ ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டுகிறது என்று அர்த்தம்.

ஆகவே இடுப்பு வலியை நீங்கள் சந்தித்தால் உடனே அதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

இடுப்பு வலி ஏற்டுவதற்கு என்ன காரணம்?
  • சிறுநீர் கழிக்கும் போது கடுமையான இடுப்பு வலியை உணர்ந்தால், அது சிறுநீர்ப்பாதை தொற்றுக்கான அறிகுறிகளுள் ஒன்று. சிறுநீர்ப்பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால், அது சிறுநீரகங்களை மோசமாக பாதிக்கும்.
  • இடுப்பு வலியுடன், வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் இருப்பின், அது பெருங்குடல் அழற்சிக்கான அறிகுறியாகும். இந்நிலை இப்படியே நீடித்தால், அது உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி பாதித்துவிடும். எனவே ஆரம்பத்திலேயே இந்த அறிகுறி தெரிந்தால் மருத்துவரை அணுகுங்கள்.
  • வயதான காலத்தில் இடுப்பு வலி வந்தால், அது ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியாகும். எனவே தவறாமல் மருத்துவரை சந்தித்து, பிரச்சனையைக் கூறி தீர்வு காணுங்கள்.
  • உங்களுக்கு வலது பக்க அடிவயிறு கடுமையாக வலித்து, காய்ச்சல், வாந்தி போன்றவை இருந்தால், அது குடல் வால் அழற்சி இருப்பதை உணர்த்துகிறது என்று அர்த்தம். இந்த அழற்சியைத் தடுக்க ஒரே வலி, அறுவை சிகிச்சையின் மூலம் நீக்குவது தான்.
  • பால்வினை நோய்கள் உங்களுக்கு பால்வினை நோய்கள் உள்ளது என்பதை வெளிப்படும் அறிகுறிகளுள் ஒன்று இடுப்பு வலி. ஆகவே இம்மாதிரியான வலியை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். இல்லாவிட்டால், இந்நோய் உங்கள் துணைக்கும் பரவிவிடும்.
  • சிறுநீர் கழிக்கும் போது வலியை சந்தித்தால், புரோஸ்டேட் சுரப்பியில் அழற்சி இருப்பதற்கான அறிகுறியாகும். எனவே சாதாரணமாக நினைக்காமல், உடனே அதற்கான சிகிக்கையை மேற்கொள்ளுங்கள்.
  • மூல நோய் பகுதியில் உள்ள நரம்புகள் தடித்து, அழற்சியுடன் இருந்தால், இடுப்பு வலியை சந்திக்கக்கூடும். இந்த நரம்பு பிரச்சனை ஆசன வாயின் உள்ளே அல்லது வெளியே இருக்கலாம். இப்படி இருந்தால், குடலியக்கத்தின் போது கடுமையான வலியை உணரக்கூடும்.

SHARE