உங்கள் வீட்டில் தீய சக்திகள் உள்ளதா? கண்டுபிடிக்க ஒரு டம்ளர் தண்ணீர் மட்டும் போதும்!

35

நம் வீட்டில் எதிர்மறை ஆற்றல் கொண்ட தீய சக்திகள் அதிகமாக இருந்தால், நாம் செய்யத் தொடங்கும் எந்தவொரு செயலாக இருந்தாலும் அதில் தோல்வியே கிடைக்கும்.

பொதுவாக ஒருவரின் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை அறிந்துக் கொள்வதற்கு ஏராளமான வழிகள் இருக்கிறது.

ஆனால் உங்கள் வீட்டில் கெட்ட சக்திகள் இருக்கிறதா என்பதை மிகவும் எளிமையாக அறிந்துக் கொள்ள எளிமையான வழி ஒன்று உள்ளது.

தீய சக்திகள் உருவாக காரணம்?
  • வீடு என்பது அனைத்து விதமான ஆற்றல்கள் நிறைந்த ஒற்றுமைக்கான இடம். எனவே இந்த வீட்டில் நம்முடைய உணர்வுகள், எண்ணங்கள், உணர்ச்சிகள் போன்ற ஆற்றல்கள் இருக்கும்.
  • நம் குடும்பத்தில் உள்ளவர்கள், பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், நண்பர்கள் ஆகியோர்கள் நம் வீட்டிற்கு வரும் போது, அவர்களுடன் சேர்ந்து எதிர்மறை ஆற்றல்களும் நம் வீட்டிற்குள் வருகிறது.
  • நம் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், வீட்டில் உள்ளவர்களுக்கு எந்நேரமும் சண்டை சச்சரவுகள், உறவுகள் முறிவது போன்ற பிரசனைகள் தோன்றும்.
  • மேலும் வீட்டில் உள்ளவர்களுக்கு, ஏதோ பேய் அடித்தது போன்று மிகுந்த களைப்பும், ஒய்வின்றி இருப்பது போன்றும் உணர்வார்கள். இதனால் நம் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருமே சந்தோஷம் இல்லாமல் இருக்கும் சூழ்நிலைகள் உருவாகும்.
தீய சக்திகள் இருப்பதை அறிவதற்கான சோதனை
  • ஒரு கண்ணாடி டம்ளரில் மூன்றில் ஒரு பங்கு கல் உப்பு போட்டு, அதில் தண்ணீரை முழுமையாக நிரப்பி, அதை நம் வீட்டின் ஒரு அறையில். மறைமுகமான இடத்தில் வைக்க வேண்டும்.
  • பின் 24 மணிநேரம் கழித்து, அந்த டம்ளரை நகர்த்தாமல் அதை நன்றாக கவனிக்க வேண்டும். அப்போது, அந்த டம்ளர் வைத்த இடத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தால், அந்த அறையில் கெட்ட சக்தி இல்லை என்று அர்த்தம்.
SHARE