பாலியல்  துஸ்பிரயோம் குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் கைது

28

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பிரதேசத்தில் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி பாலியல்  துஸ்பிரயோம் செய்த குற்றச்சாட்டில் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

தரம் 10 இல் கல்வி கற்று வரும் சிறுமியை  குறித்த சிறுவன் ஆசைவார்த்தை காட்டி சிறுமியை கடந்த 18 ஆம் திகதி அழைத்துச் சென்று வாழைச்சேனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் வைதது பாலியல் துஸ்பிரயோம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் சிறுமி கடத்தப்பட்டுள்ளார் என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் சிறுவனை வாழைச்சேனை பிரதேசத்தில் வைத்து கைது செய்ததுடன் சிறுமியை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து கைதுசெய்யப்பட சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

SHARE