மனித சங்கிலி போராட்டம் வவுனியாவில் இன்று

141

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு ஆதரவு தெரிவித்து மனித சங்கிலி போராட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா வைத்தியாலைக்கு முன்பாக ஒன்றிணைந்த அரசியல் கட்சிகளின் பொது அமைப்பினரால் இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் தொடர்பாக அவர்கள் கூறுகையில் ,“தோட்டத்தொழிலாளர்கள் தமது அடிப்படைச்சம்பளம் 1000 ரூபாயை  வலியுறுத்தி போராடி வருகின்றனர். அப்போராட்டமானது இன்றைய சூழலில் நியாயமானதும் சரியானதும் ஆகும்.

ஆகவே அவர்களுக்கு வவுனியா மாவட்ட ஒன்றிணைந்த அரசியல் கட்சிகளின் பொது அமைப்பினர் எனும் அடிப்படையில் ஆதரவுக்கரத்தை நீட்டுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினரும் ஈழமக்கள் புரச்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா, ஈழவர் புரட்சி அமைப்புக்கட்சி, புளொட் அமைப்பு, புதிய ஜனநாயக மார்க்லெனிசக் கட்சி, ஸ்ரீரெலோ கட்சி, முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர், என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE