பொடுகை முற்றிலும் போக்க ஒரு துண்டு இஞ்சி மட்டும் போதும்! எப்படி தெரியுமா?

146

இஞ்சியில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பொருட்கள் பல்வேறு நோய்களின் தாக்குதல்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.

இஞ்சியில் விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன.

இத்தகைய இஞ்சி நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி தலை முடியின் அழககை அதிகரிக்கவும் உதவுகின்றன. குறிப்பாக தலையில் உருவாக கூடிய பொடுகை இது முற்றிலுமாக குறைத்து விடும்.

பொடுகை போக்கும் இஞ்சி எப்படி?
இஞ்சி மற்றும் நெல்லிக்காய்
  • முதலில் இஞ்சியை நன்றாக அரைத்து அதன் சாற்றுடன் நெல்லிக்காய் சாற்றையும் ன கலந்து பின் தலைக்கு தேய்த்து 20 நிமிடம் கழித்து குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்தால் பொடுகு தொல்லை பறந்து போய்விடும்.

இஞ்சி மற்றும் ஆமணக்கு எண்ணெய்
  • பொடுகை உடனே ஒழித்து கட்ட இஞ்சி சாறுடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து இந்த கலவையை தலைக்கு தேய்த்து 15 நிமிடம் கழித்து தலைக்கு குளியுங்கள். இதனை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் போதும் உடனே பொடுகை போக்கி விடலாம்.

இஞ்சி மற்றும் கற்றாழை
  • பொடுகை விரைவில் விரட்டி அடிக்க கற்றாழை செல்லுடன் இஞ்சி சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொண்டு தலைக்கு தேய்த்து 30 நிமிடம் கழித்து தலைக்கு தேய்த்து குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் பொடுகு தொல்லை சட்டென போக கூடும்.

இஞ்சியின் மருத்துவ பயன்கள்
  • நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராக வைக்கவும் உதவுகிறது.
  • உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள். இஞ்சியை காலையில் சாப்பிட்டால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும், பசியுணர்வு அதிகரிக்கும்.
  • சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றைத் தலைவலி நீங்கும்.
  • நீரில் சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க, நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி முறிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
  • பல் வலி இருக்கும் போது, இஞ்சி துண்டை ஈறுகளில் மசாஜ் செய்தால், நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், நீரில் இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
  • இஞ்சி குமட்டல் மற்றும் வாந்தி வருவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, காலையில் ஏற்படும் சோர்வையும் இஞ்சி தடுக்கும்.
  • இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து பருக செரிமான பிரச்சனைகள் அகலும். அதிலும் காலையில் பருகினால், உங்கள் செரிமான மண்டலம் சுத்தமாகி, அதன் செயல்பாடு அதிகரிக்கும்.
SHARE