மன்னாரில் வீடு ஒன்றின் சமயலறையினுள் ஆயுதம் உள்ளதாக சந்தேகம் 

147
-மன்னார் நகர் நிருபர்-
 
இரகசிய தகவலின்  அடிப்படையில் கொழும்பிலிருந்து மன்னாரிற்கு வருகை வந்த குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று மன்னார் எமிழ் நகர் பகுதியில் உள்ள வீட்டு சமையலறை பகுதியில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட போதும் எவ்வித ஆயுதங்களும் மீட்கப்பவில்லை.
குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை(29) மாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் உள்ள குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் வருகை தந்த அவர்கள் மன்னார் பொலிஸார் கூடாக மன்னார் எமிழ் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குச் சென்று தேடுதல்களை மேற்கொண்டதோடு,சமையல் அறை பகுதியில் அகழ் பணிகளை மேற்கொள்ள அனுமதியை கோரி இருந்தனர்.
எனினும் வீட்டின் உரியைமாளர்கள் உத்தியோகபூர்வ அனுமதியை பெற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறியிருந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று நேற்று திங்கட்கிழமை(29) மாலை 2.30 மணியளவில் குறித்த வீட்டிற்கு விசேட அதிரடிப்படையுடன் சென்று சோதனைகளை மேற்கொண்டதோடு, குறித்த வீட்டின் சமயல் அறைப்பகுதியையும் கடுமையாக தோண்டி சோதனையிட்டனர்.
மாலை 7 மணிவரை தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்ட போதும்   எவ்வித வெடிபொருட்களும் கண்டு பிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.
குறித்த வீடு  கடந்த  2007ஆம் ஆண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு கணவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் குறித்த வீட்டில் தாய் உட்பட இரண்டு பிள்ளைகள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE