ஜனநாயகத்தை தலைகீழாக்கியுள்ளது – சமந்தா பவர்

171

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள் ஜனநாயகத்தை தலைகீழாக்கியுள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான முன்னாள் அமெரிக்கப் பிரதிநிதியும், சிரேஸ்ட ராஜதந்திரியுமான சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் டுவிட் பதிவு ஒன்றை இட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல்களை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்த ஜனாதிபதி மைத்திரி, போர்க் குற்றச் செயல்கள் மற்றும் காணாமல் போதல்களுக்கு பொறுப்பான மஹிந்த ராஜபக்சவை மீளவும் பிரதமர் பதவியில் அமர்த்தியுள்ளார்.

இலங்கையர்கள் அதிகளவில் இரத்த வெள்ளத்தை அனுபவித்துள்ளனர் எனவும், உடனடியாக ராஜதந்திர தலையீடுகள் இந்த விடயத்தில் அவசியம் எனவும் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

SHARE