தற்கொலைப் படைத் தாக்குதலில் 6 பேர் படுகாயம்

151

ஆப்பானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள தேர்தல் ஆணையகத்தின் தலைமையகத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

இதேவேளை 33 மாகாணங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் பணிகளை தேர்தல் ஆணையகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந் நிலையில் தலைநகர் காபூலில் உள்ள தேர்தல் ஆணையகததின் தலைமை அலுவலகத்தின் மீது தற்கொலை படைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையகத்தின் தலைமை அலுவலகத்துக்கு வெளியே உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் ஏராளமான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த பயங்கரவாதியொருவர் தனது உடலில் கட்டி கொண்டு வந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.

இதில் குறித்த பயங்கரவாதி உடல் சிதறி உயிரிழந்ததுடன், தேர்தல் ஆணைய அதிகாரிகள் 4 பேர் மற்றும் 2 பொலிஸார் பலத்த கயாங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இது பற்றி தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து தேர்தல் ஆணையக தலைமை அலுவலவத்தை சுற்றிவளைத்து பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டு வந்தனர்.

அத்துடன் இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE