அரச வங்கியில் கொள்ளை – சந்தேக நபர்களை பொலிஸார் கைது

155

கொட்டாவ – மத்தேகொட  பகுதியிலுள்ள அரச வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் நகையுடன் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொட்டாவ – மத்தேகொட பகுதியில் இயங்கிவரும் அரச வங்கியொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மோட்டார் காரில் வந்த இனந்தெரியாத மூவர் துப்பாக்கியை காட்டி பணம் மற்றும் நகைகளை  கொள்ளையிட்டு சென்றனர் .

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த கொட்டாவ பொலிஸார் இன்று காலை சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்தும் 493 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும் 93 இலட்சம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE