மாணவி சடலமாக மீட்பு

140

மட்டக்களப்பு,கல்லடி பாலத்திற்கு அருகில் மாணவி ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கல்லடி,உப்போடை பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பயிலும் கரடியனாறு பகுதியை சேர்ந்த  18வயதுடைய மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவி நாவற்குடாவில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பாடசாலைக்கு சென்றுவருவதாகவும் குறித்த மாணவியை நேற்று காலை முதல் காணாத நிலையில் நேற்று மாலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றதடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் காத்தான்குடி பொலிஸார் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.

குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

SHARE