தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக தெரிவிப்பு

145

எவ்வித தட்டுப்பாடுமின்றி அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலதிக பௌவுஸர்களும் பயன்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதாக தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மேலதிக கொள்வனவைத் தவிர்த்து வழமைபோன்று எரிபொருளைக் கொள்வனவு செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

நேற்று முன்தினம் பிற்பகல் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைமையகத்தில் இடம்பெற்ற அமைதியின்மையில் தமது அங்கத்தவர் ஒருவர் உயிரிழந்தமையைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்றோலியத்துறைத் தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்திருந்தன.

இந்த நிலைமைக்குக் காரணமான முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நேற்று மாலை கைது செய்யப்பட்டமையை அடுத்து, முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE