தடைகளை நீக்க அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

30

அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் டேவிட் வோர்னர்  கமரொன் பான்கிராவ்ட் ஆகியோரிற்கு எதிரான தடைகளை நீக்கவேண்டும் என அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பந்தை சேதப்படுத்தும் நடவடிக்கைகளிற்கு  அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டு;ப்பாட்டுச்சபையி;ன் கலாச்சாரமும் அமைப்புமுறையும் காரணம் என்பது சுயாதீன விசாரணைமூலம் தெரியவந்துள்ளதன் காரணமாக மூன்று வீரர்கள் மீதான தடையையும் நீக்கவேண்டும் என வீரர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மூன்று வீரர்களும் போதுமான அளவிற்கு  தண்டிக்கப்பட்டுள்ளனர்  அவர்களை இனி கிரிக்கெட் விளையாட அனுமதியுங்கள் என கிரிக்கெட் வீரர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தென்னாபிரிக்காவில் பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்திற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையும் பொறுப்பேற்க வேண்டும் தனிநபர்கள் தவறு செய்ய முயன்றிருக்கலாம் ஆனால் அமைப்புமுறையின் தோல்வியும் இதற்கு காரணம் என்பது சுயாதீன விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என என வீரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின்  நடவடிக்கைகளை கடுமையாக விமர்சிக்கும் ஆய்வொன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய வீரர்கள் வெற்றிக்கா பாடுபடும் இயந்திரங்கள் போல மாற்றப்படுகின்றனர் என சுயாதீன ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய வீரர்கள் பெருமளவிற்கு தங்கள் குடும்பம் உறவு சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையிலேயே வாழ்கின்றனர் சுயாதீன ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட ஆய்வொன்றே இதனை தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய வீரர்கள் வெற்றிக்கான இயந்திரங்களாக மாற்றப்பட்ட நிலையே வெற்றிக்காக அவர்கள் எதனையும் செய்யதுணியும் நிலையை உருவாக்கியுள்ளது எனஆய்வு தெரிவித்துள்ளது.

SHARE