இப்படி ஒரு கூட்டணியா மாஸ் தல

159

அஜித் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பில் படு பிஸியாக இருக்கிறார். படப்பிடிப்பில் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிற நேரத்தில் படத்திற்காக போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் வேகமாக நடக்கிறது.

தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு செய்தி. சிவாவுடனேயே தொடர்ந்து கூட்டணி அமைத்து வந்த அஜித் இப்போது 59வது படத்தின் மூலம் தீரன் பட புகழ் வினோத்துடன் இணைய இருக்கிறார்.

போனி கபூர் இப்படத்தை தயாரிக்க படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பெப்ரவரியில் தொடங்குகிறது.

படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் அல்லது யுவன் தான் இசை என கிசுகிசுக்கப்படுகிறது. இப்படி ஒரு தகவல் வர ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள், ஆனால் இது உண்மையா என்பதை பொறுத்திருந்து கேட்போம்.

SHARE