உடல் எடை அதிகரிக்கும் – சோளம்

176

சோளத்தை வேக வைத்து சாப்பிடும் போது அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் அளவு அதிகரிக்கும். இந்த ஆரோக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மேலும் சோளத்தை சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் கடைகளில், இனிப்புச் சோளம் என்றும் மசாலா, வெண்ணெய் கலந்து செய்யப்படும் சோளம் நல்லதல்ல.

சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்

சோளத்தில் கார்போஹைட்ரெட் அளவு அதிகமாக உள்ள இவை உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நீரிழிவு நோயை ஏற்படுத்தும். மேலும், சர்க்கரை நோயாளிகள் இதனை உண்ணாமல் இருப்பது நல்லது.

உடல் எடை அதிகரிப்பு

சோளத்தை சாப்பிடுவதால் உடல் பருமன் பல வித பாதிப்புகளை உடலில் ஏற்படுத்த கூடும். முக்கியமாக இதில் உள்ள அதிகமான சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரெட் உடல் எடையை கூட செய்து விடும்.

வாய்வு தொல்லை உண்டாக்கும்

சோளத்தை சாப்பிடுவதால் இதில் உள்ள ஸ்டார்ச் உங்களுக்கு வாய்வு பிரச்சினையை தரும். மேலும் பசியின்மையும் ஏற்படுத்தும். எனவே சோளத்தை அதிகமாக உண்ணாதீர்கள்.

செரிமான பிரச்சனை

இன்று பலரும் செரிமான பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். அந்த வகையில் சோளத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது.

உடலில் அரிப்புகள்

சோளத்தை அதிகமாக சாப்பிட்டு விட்டால் பல வித ஒவ்வாமைகள் ஏற்பட கூடும். உங்களின் உடலில் சொறிகள், அரிப்புகள் போன்றவற்றையும் இது ஏற்படுத்த கூடும்.

குடல் எரிச்சல்

அளவுக்கு அதிகமாக சோளம் சாப்பிட்டால் அவை வயிற்று போக்கை உங்களுக்கு ஏற்படுத்தி விடும். சில சமயம் குடலில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மயக்க நிலை

சோளத்தில் உள்ள அதிக படியான ஸ்டார்ச் மயக்க நிலையை உண்டாக்கும். எனவே சோளத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள்.

பல் சொத்தை

சோளத்தில் உள்ள சர்க்கரை பற்களை பாதித்து விடும். எனவே, முடிந்த வரை அதிக அளவில் சோளத்தை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.

SHARE