மாவீரர் தின நிகழ்வுக்கான முன் ஆயத்த கலந்தாலோசிப்பு

157
மன்னார் நகர நிருபர்
ஏதிர் வரும் மாதம் 27 திகதி தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த மாவீர்களின் நினைவு தினமானது வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தை பெறுத்த வரையில் ஆட்காட்டி வெளி மற்றும் பண்டிவரிச்சான் ஆகிய இரு இடங்களின் மாவீர் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்றது குறித்த இரு மாவீரர் துயிலும் இல்லங்களிலும் இவ்வருடம் வீர மரணம் அடைந்த மாவீரர்களுக்கான நினைவேந்தல்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 10 மணியலவில் மன்னார் பெரியகமம் பொது மண்டபத்தில் இடம் பெற்றது
உயிர்தியாகம் செய்த மாவீர்களின் பெற்றோர்கள் தலைமையில் இடம் பெற்ற மேற்படி கூட்டத்தில் மதத் தலைவர்கள் அருட்தந்தையர்கள் முன்னால் பேராளிகள் மாவீரர் குடும்பத்தினர் மன்னார் நகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்த கொண்டிருந்தனர்
குறித்த கூட்டத்தில் இடம் பெற இருக்கும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளின் ஒழுங்கமைப்பு மற்றும் கட்டமைப்பு ஏனைய விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது குறித்த கலந்துரையாடலில் கலந்த கொண்டு கருத்து தெரிவித்த அருட்தந்தை நவரட்ணம் இவ் மாவீரர் நிகழ்வில் அரசியல் கட்சிகளின் பெயர்களே கதைகளே இதில் அமைக்கப்படும் குழுக்களிலே வேண்டாம் எனவும் யாராக இருந்தாலும் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தாது தனிநபரக வரலாம் எனவும் தொரிவித்தார்
அத்துடன் மாவீர்கள் எதை விட்டு சென்றார்களே அதை உண்மையிலே தொடர நினைப்பவர்களே வரவேண்டும் எனவும் இறத்த மாவீரர்களின் ஆசை வெறுமனே நாம் தூவும் பூக்களில் சாந்தியடையபேவதில்லை எனவும் அவர்களிக் கொள்கைகளை நாம்  தெடர்வதிலேயே சாந்தியடையும் எனவும் தெரிவித்தார்
 அத்துடன்  2016 மற்றும் 2017 சரி நல்லாட்சி அரசாங்கத்திலும் அச்சுறுத்தல்கள் காணப்பட்டன இனியும் தொடரத்தான் போகின்றது எனவே அதை பற்றி கவலைப்படாது எமக்காக இறந்தவர்களை நினைவு கூறுவேம் எனவும் தொரிவித்தர்
SHARE