கம்பஹா, கொழும்பில் இரு தொழிற்பயிற்சி நிலையங்கள் நிர்மாணிப்பு

149

கம்பஹா. கொழும்பு பிரதேசங்களில் இரு தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இப்பயிற்சி நிலையங்களின் நிர்மாணப் பணிகள், தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், கட்டுமானப் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மதிப்பு, 26 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதோடு, இத்தொகை கொரிய எக்சிம் வங்கியினால் 0.15 வீத வட்டி அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

இவ்விரண்டு நிலையங்களுக்கான அனைத்து உபகரணங்களையும் இவ்வருட இறுதிக்குள் பெற்றுக் கொடுக்கத் தேவையான முயற்சிகள், தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை ஒரு உயர் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடாக முன்னேறி வரும் இவ்வேளையில், திறன் மிக்க ஊழியர்களை குறித்த தொழிற்சாலைகளுக்குப் பெற்றுக்கொடுத்து, பொருளாதார அபிவிருத்திகளை ஊக்குவிக்கும் செயற்பாடாக, மேற்கண்ட முயற்சிகள் அமைகின்றன.

இதேவேளை, இத்திட்டங்கள் மூலம் தேசிய மற்றும் சர்வதேச தொழிற் சந்தைகளில் காணப்படும் திறன்மிக்க ஊழியர்களுக்கான கேள்வி மற்றும் நிரம்பலுக்கிடையிலான இடைவெளியும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE