போட்டியை நன்றாக கணிக்கிறார்,அறிவுடன் பேட்டிங் செய்கிறார் .

160

அம்பத்தி ராயுடு தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டதாகவும், அவர்தான் 2019 உலகக் கிண்ணத்தில் முக்கிய பங்கு வகிக்க உள்ளதாகவும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி வீரர் அதிரடியாக 80 பந்துகளில் சதம் விளாசினார். மேலும், ரோஹித் ஷர்மாவுடன் இரட்டை சத கூட்டணி அமைத்து அணியின் ஸ்கோரை மள மளவென உயர்த்தினார்.

இதனை பாராட்டிய விராட் கோஹ்லி, களவியூகத்தில் இடைவெளிகளை நன்றாக நினைவில் வைத்துக் கொண்டு ஷாட்களை ஆடியதால், 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் ராயுடு தான் 4வது வரிசையை காக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அம்பத்தி ராயுடு குறித்து மேலும் அவர் கூறுகையில், ராயுடு அவருக்கு கொடுத்த வாய்ப்பை இருகைகளிலும் எடுத்துக் கொண்டுவிட்டார். 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வரை நாம் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர் போட்டியை நன்றாக கணிக்கிறார். அறிவுடன் பேட்டிங் செய்கிறார் என தெரிவித்துள்ளார்.

SHARE