முல்லைத்தீவு, பனிக்கன்குளம், மாங்குளம் ஆகிய பிரதேசங்களில் யானைத் தொல்லை

33

முல்லைத்தீவு, பனிக்கன்குளம், மாங்குளம் ஆகிய பிரதேசங்களில் காட்டுயானைகளை கட்டுப்படுத்தும் வகையில் வேலிகளை அமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர்பிரிவிற்குட்பட்ட பனிக்கன்குளம், மாங்குளம், கற்குவாரி, கிழவன்குளம் ஆகிய பகுதிகளில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது.

இவ்வாறு மேற்குறித்த பகுதிகளில் தமது வாழ்வாதார செய்கைகளை மேற்கொண்டு வாழக்கூடிய வகையில் வேலிகளை அமைத்துத்தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE