சந்தானத்துக்கு ஜோடியாக இந்தி நடிகை தாரா அலிசா பெர்ரி

149

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் இந்தி நடிகையொருவர் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகம், ‘தில்லுக்கு துட்டு-2’ என்ற பெயரில் தயாராகியிருக்கின்றது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சந்தானம் மற்றும்மொரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார். அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை தாரா அலிசா பெர்ரி நடிக்கின்றார்.

முக்கிய கதாபாத்திரங்களில் யதீன் கார்கேயர், மொட்டை ராஜேந்திரன், சாய்குமார் என பலர் நடிக்கின்றார்கள். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜொன்சன் இயக்குகின்றார்.

மேலும் எஸ்.ராஜ் நாராயணன் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றார்

இந்தத் திரைப்படத்தின் கதை காதலும், நகைச்சுவையும் கலந்ததொரு கதையாகும். இதில், வட சென்னையில் வசிக்கும் ஒரு சராசரி இளைஞராக வருகின்றார் சந்தானம்.

மேலும் இந்ததிரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் நடைபெற்று வருகின்றது. ‘தில்லுக்கு துட்டு-2’ திரைப்படம் வெளிவர இருக்கும் நிலையில், சந்தானம் புதிய படத்தில் நடிக்க தொடங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE