தமிழ் தேசிய கூட்டமைப்பு பல தடவைகள் தமிழ் மக்களின் குரலாக செயற்படவில்லை – அருட்தந்தை செபமாலை

39
(மன்னார் நகர் நிருபர்)
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என கொள்ளப்படுகின்றனர் ஆனலும் பல தடவைகள் அவர்கள் தமிழ் மக்களின் குரலாக செயற்படவில்லை என மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் முன்னால் தலைவர் அருட்தந்தை செபமாலை தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இலங்கை முழுவதும் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப சுழ்நிலை காரணமாக எந்த கட்சி யாருக்கு ஆதரவளிப்பது என்ற குழப்பநிலையில் உள்ளது இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பனது தீர்மாணிக்கும் சக்தியாக காணப்படுகின்றது.
இது தொடர்பில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்த தெரிவித்த மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் முன்னால் தலைவர் அருட்தந்தை செபமாலை அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என கொள்ளப்படுகின்றனர் அண்மை காலமாக பல சந்தர்பங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் குரலாக ஒழிக்காத சந்தர்பங்களும் அமைந்திருகின்றன ஆனலும் இந்த சந்தர்பத்தில் அவர்கள் இதனை சரியாக பயன்படுத்த வேண்டும்.
 தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தமிழ் மக்களுடைய உரிமை பிரச்சினை தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாக எந்த அரசாங்கம்  தாங்கள் செய்வோம் என்று செல்கின்றதே அதற்கு தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்  அத்துடன் ஜ.நா மன்றத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை எந்த அரசாங்கம் நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுக்கின்றதோ அந்த அரசாங்கத்துக்கே ஒத்துழைப்பு வழங்கவேண்டும் அதாவது போர்குற்றம் இனப்படுகொலை காணமல் ஆக்கப்பட்டோருடைய பிரச்சினை அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் சீர்திருத்தம் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை தொடர்பாக எந்த அரசாங்கம் தாங்கள் செய்வோம் என்று வாக்குறுதி கொடுக்கின்றார்களே அவர்களுக்கு தான் ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கவேண்டும் என மேலும் தெரிவித்தார்.
SHARE