இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழான வீடுகளது தரம் குறித்து மீளாய்வு

61

பெருந்தோட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழான வீடுகளது தரம் குறித்து மீளாய்வு செய்ய புதிதாக பதவியேற்றுள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தின் கீழ் பெருந்தோட்டங்கள் பலவற்றில் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சுப் பதவியை பழனி திகாம்பரம் வகித்தப்போது வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.

தற்போது  அமைச்சுப் பொறுப்பை ஆறுமுகம் தொண்டமான் ஏற்றுள்ள நிலையில், குறித்த வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் தரத்தை மீளாய்வு செய்ய அவர் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழான வீடுகளது தரம் குறித்து மீளாய்வு செய்ய கட்டிடப் பொறியியலாளர்கள் அடங்கிய நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE