சந்தேகநபர் துப்பாக்கியுடன் கைது

67

ஹிக்கடுவை கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி ஹிக்கடுவை தபால் காரியாலயத்திற்கு அண்மையில் சைக்கிளில் பயணித்த நபருக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால்  துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது .

துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான நபர் உயிரிழந்துள்ளதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து டி 56 ரக துப்பாக்கியொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE