கனடாவின் மிலோஸ் ராயோனிக் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

57
பரிஸ் மாஸ்டஸ் டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, முதலாம் சுற்று போட்டியில், கனடாவின் மிலோஸ் ராயோனிக் போராடி வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

முதலாம் சுற்று போட்டியில், கனடாவின் மிலோஸ் ராயோனிக், பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்காவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை தந்த இப்போட்டியில், மூன்று செட்டுகளுமே டை பிரேக் வரை நீடித்தது.

இப்போட்டியில் முதல் செட்டை ஜோ வில்பிரைட் சோங்கா, 7-6 என கைப்பற்றினார்.

இதனைதொடர்ந்து மீண்டெழுந்த மிலோஸ் ராயோனிக், அடுத்த இரண்டு செட்டுகளையும் 7-6, 7-6 என கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றில் மிலோஸ் ராயோனிக், சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரரை எதிர்த்து விளையாடவுள்ளார்.

SHARE