பாகிஸ்தான் வீரர் பாபர் அஸாம் மீண்டும் முதலிடம்

54

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டி20 துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசைப் பட்டியலில், பாகிஸ்தான் வீரர் பாபர் அஸாம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் பாபர் அஸாம், சமீபத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் இரண்டு அரைசதங்களை விளாசினார்.

அவரது ஸ்ட்ரைக் ரேட் 117 ஆகும். இதன்மூலம் மொத்தம் 844 புள்ளிகளைப் பெற்று அவுஸ்திரேலிய வீரரான ஆரோன் பிஞ்ச்சை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

அத்துடன் இந்த ஆண்டில் 3வது முறையாக, டி20 துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். பிஞ்ச் மற்றும் பாபர் அஸாம் இருவரும் முதலிடத்தை மாறி மாறி பிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 136 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி முதலிடத்திலும், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

SHARE