வவுனியாவில் 80 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

54

வவுனியாவில் கஞ்சா விற்பனை செய்யும் வியாபாரி ஒருவரை இன்று அதிகாலை 3 மணியளவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 51 வயதுடைய கல்நாட்டினகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

யாழ்ப்பாணத்திலிருந்து பியத்தலாவ நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸுல் சோதனை மேற்கொண்டபோதே போதை ஒழிப்புப் பிரிவினர் 80 கிராம் கஞ்சாவுடன் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவர் மீது போதை பொருட்களுடன் தொடர்புபட்ட 4 வழக்குள் பதிவு செய்யப்பட்டள்ளமையும், பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE