மன்னார் மனித புதைகுழி எச்சங்களை புளோரிடா அனுப்புவதற்கு அனுமதி 

38
மன்னார் நகர் நிருபர்
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 98 வது நாளாக தொடர்சியாக இடம் பெற்று வருகின்றது தெடர்ச்சியாக மழை பெய்கின்ற போதும் மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டும் அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்றது.
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி T.சரவண ராஜா மே்ார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையிலும் அகழ்வு பணியானது இடம் பெற்று
 வருகின்றது.
அந்த வகையில் இன்றய தினம் மனித புதைகுழி வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த சட்டவைத்திய அதிகாரி இந்த வாரம் முழுவதும் இடம்பெற்ற அகழ்வு பணி தொடர்பான தகவல்களை தெரிவித்தார் குறிப்பாக இன்றய தினத்துடன்  98 வது தடவையாக மனித எச்சங்கள் அகழ்வுபணிகள் இடம் பெறுவதாகவும் இதுவரை 216 மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 209 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிக மனித எச்சங்களை அப்புறப்படும்தும் பணிகள் தோடர்ச்சியாக இடம் பெறுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த மனித எச்சங்களை காபன் பரிசோதனைக்காக அமெரிக்காவில் உள்ள புளோரிடா ஆய்வு கூடத்துக்கு அனுப்புவதற்கான அனுமதியை மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி வழங்கியுள்ளதாகவும் விரைவில் அதி முக்கியமான எச்சங்கள் மற்றும் தடய பொருட்களை குறித்த ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களால் மனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்பாகவும் மனித எச்சங்கள் மற்றும் தடய பொருட்கள் அத்துடன் அவை பற்றிய ஆய்வு முடிவுகள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்ட போதும் அது தொடர்பான எந்த கருத்தையும் சட்ட வைத்திய அதிகாரி தெரிவிக்கவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE