கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

32

வவுனியாவில் நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் நேற்றைய தினம் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 3.30 மணியளவில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி கட்டுத் துப்பாக்கியுடன் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றிருப்பதாக நெடுங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர் துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

SHARE