விபத்தில் சிக்குண்டுட இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

32

வவுனியா, மடுகந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்குண்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா மடுகந்தை பகுதியில் கடந்த 11.10.2018 அன்று முச்சக்கர வண்டியும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், முச்சக்கர வண்டியில் பயணித்த மேலும் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டும் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

SHARE