மதவாச்சியிலிருந்து தலைமன்னாருக்கான புகையிரத சேவை ஆரம்பம்

44

மதவாச்சியிலிருந்து தலைமன்னாருக்கான புகையிரத சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

புனரமைக்கப்பட்ட இந்த புகையிரத மார்க்கத்தில் இன்று பரீட்சார்த்தப் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலான் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய இன்று மாலை முதல் வழமைபோல புகையிரத சேவை முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரையான புகையிரத மார்க்கத்தில் காணப்படும் 3 பாலங்களின் புனரமைப்புப் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

அதேவேளை நாளொன்றுக்கு கொழும்பிற்கும் தலைமன்னாருக்கும் இடையில் 4 புகையிரதங்கள் சேவைகளில் ஈடுபடுகின்றன.

புகையிரத மார்க்கம் மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் விசேட சேவைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE