எகிப்திய அழகிகளின் பரம ரகசியம் அம்பலம்! தமிழ் பெண்களே கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்

43

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு சிறந்த வரலாறு இருக்க தான் செய்யும். வரலாறுகள் மிகவும் ஆற்றல் கொண்டவை. இவை ஒரு நாட்டின் முழு வளர்ச்சிக்கும் முக்கியமானதாகும்.

வரலாற்றில் நிச்சயமாக எண்ணற்ற ராஜா ராணிகள் இடம் பெற்றிருப்பர். இவர்களின் அழகை பற்றி இன்றளவும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் முக்கிய இடத்தில் இருப்பவர்கள் இந்த எகிப்தியர்கள்.

எகிப்தில் இருந்த ராஜாக்கள் மற்றும் ராணிகள் உலகிலேயே வியக்க தக்க அழகுடன் இருந்ததாக வரலாறுகள் சொல்கிறது. இந்த பதிவில் எகிப்திய மம்மிகள் அழகில் திளைக்க முக்கிய காரணமாக இருந்த சில அழகு இரகசியங்களை பற்றி நாம் தெரிந்து கொள்வோம். கட்டாயாம் தமிழ் பெண்களே படிக்கவும்.

எகிப்திய மர்மங்கள்!

எந்த காலகட்டத்திலும் எகிப்தியர்களின் மர்மங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். எகிப்தில் உள்ள சிறு சிறு விஷயங்கள் கூட மர்ம முடிச்சுகளை வைத்திருக்கும். அந்த வகையில் உலகே பார்த்து ஆச்சரிய பட கூடிய விஷயங்களில் ஒன்று, எகித்தியர்களின் அழகுதான்.

கூந்தல் பொலிவிற்கு

எகிப்தியர்கள் கூந்தலை பொலிவு பெற செய்ய ஒரு சில முக்கிய குறிப்புகளை கட்டிப்பிடித்து வந்தனர். அதில் மிக முக்கியமானவை தேங்காய் வெண்ணெய் தான். பிரத்தியேகமாக எந்த வித செயற்கை பொருளும் சேர்க்காத இந்த தேங்காய் வெண்ணெயை அவர்கள் முடியின் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.

முக பருக்களுக்கு

முக பாரு என்றாலே நமக்கெல்லாம் கடுப்பு நிச்சயம் வரத்தான் செய்யும். இதனை எளிதில் போக்க எகித்தியர்கள் வெந்தயத்தை பயன்படுத்தினர். முகத்தில் உள்ள பருக்களில் இந்த வெந்தய விதைகளை அரைத்து போட்டு கொண்டால் விரைவில் மறைந்து விடுமாம்.

செக்க சிவந்த உதடு

எகிப்திய ராணிகள் அவர்களின் உதடுகளை அழகு செய்து கொள்ள சிவப்பு நிறமுள்ள ஒன்றை பயன்படுத்தினர். ரெட் அச்ரே என்ற ஒன்று களிமண்ணில் கிடைக்க கூடிய மூல பொருளாம். இதனை பயன்படுத்தி தான் ராணிகள் ராஜாக்களை கவர்ந்து வந்தனர்.

முதலை சாணம்

எகிப்தியர்கள் அவர்களின் அழகை மேம்படுத்த முதலை சாணத்தை பயன்படுத்தினர். அதாவது, கழுத்தை பாலில் இந்த முதலை சாணத்தை கலந்து அவர்கள் தங்களது அழகை மேம்படுத்த உபயோகித்தனர். இது சற்றே அருவருக்கதக்க விஷயமாகவே மற்றவர்களால் பார்க்க படுகிறது.

கைகளின் அழகு

நகங்களை அழகு செய்ய இரு வித முறைகளை கடைபிடித்தனர். அவற்றில் ஒன்று மருதாணி, வேறொன்று பாதாம் எண்ணெய்.

இவை இரண்டும் அவர்களின் தோலில் எந்த வித நோய்களும் ஏற்படாமல் பார்த்து கொள்ளுமாம். மேலும், குங்குமப்பூவை கண் இமைகளின் மேல் தடவினால் ஒரு வித நிறத்தை பெற்ற கவர்ச்சியாக இருக்குமாம்.

கற்றாழை

சருமத்தின் பாதுகாப்பை அதிகரிக்க இந்த கற்றாழை நன்கு பயன்படும். இதை தான் எகிப்தியர்களும் பயன்படுத்தினர். கற்றாழை ஜெல்லை மட்டும் முகத்தில் பூசி அழகு படுத்தி வந்தனர். மேலும், இதை உட்கொள்ளும் பழக்கமும் அவர்களிடம் இருந்ததாம்.

வாசனை திரவியங்கள்

உடலில் வாசனை மண மணக்க எகிப்தியர்கள் முதன்மையான சில குறிப்புகளை உபயோகித்தனர். லாவெண்டர், ரோஸ்மேரி, சிடார் போன்ற பூக்களை கொண்டு வாசனை திரவியம் செய்து அதனை உடலில் அடித்து கொண்டனர்.

SHARE