வைரமுத்துவிற்கு வக்காளத்து வாங்கிய நடிகருக்கு ஏற்பட்ட பரிதாபம்!.. இது தேவையா உங்களுக்கு.

21

வைரமுத்து படுக்கைக்கு பெண்ணை தானே அழைத்தார், ஆண்களை அழைக்கவில்லையே என்று மீடூ விவகாரத்தை கடுமையாக விமர்சித்த பரியேறும் பெருமாள் நடிகர் மாரிமுத்து , தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க போவதில்லை என்று கூறியுள்ளார்.

பரியேறும் பெருமாள் படத்தில் நாயகியின் தந்தையாக நடித்திருப்பவர் இயக்குனர் மாரிமுத்து. அந்த படத்தில் நாயகனின் தந்தையாக கேமரா முன்பு நிர்வாணமாக நடித்த தங்கராஜ் என்ற கிராமிய கலைஞரின் காலில் விழுந்து வணங்கி தனது கலை ஆர்வத்தை வெளிப்படுத்தியவர் மாரிமுத்து.

அண்மையில் சமூக வலைதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் மீடூ விவகாரத்தையும் வைரமுத்துவுக்கு எதிரான சின்மயி புகாரையும் கடுமையாக விமர்சித்தார் மாரிமுத்து.

இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உலகெங்கிலும் இருந்து தொடர்ந்து அவரது செல்போனில் கண்டன குரல்களை எழுப்பி பெண்ணியவாதிகள் கட்டியேறியதால், பதில் சொல்ல இயலாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் மாரிமுத்து. தற்போது தெரிந்தவர்களின் அழைப்புகளை மட்டுமே எடுக்கும் நிலையில் உள்ளார்.

மேலும் வைரமுத்து மீது உள்ள பாசத்தால், கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டதாக தெரிவித்த அவர் அந்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க போவதில்லை என்றும் திட்டவட்டமாக கூறினார்.

மாரிமுத்துவின் கருத்துக்கு நடிகர் சித்தார்த் உள்ளிட்ட பலரும் டிவிட்டரில் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SHARE