மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு

48

முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் தனது 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஆறு பயனாளிகளுக்கு ரூபா ஐம்பத்து எட்டு ஆயிரம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களைக் கொள்வனவு செய்து 01.11.2018 அன்று வழங்கி வைத்தார்.

நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள விவசாய, மீன்பிடி அமைச்சில் காலை 10.00 மணியளவில் நடைபெற்ற இந் நிகழ்வில் வடக்கு மாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் திரு.க.தெய்வேந்திரம், அமைச்சின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ.சுரேந்திரநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

 

SHARE