விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் வழங்கி வைப்பு

58

யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்கள் ஊடாக விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கரவெட்டி, மருதங்கேணி, பருத்தித்துறை, காரைநகர், உடுவில், தெல்லிப்பளை, நல்லூர் ஆகிய பிரதேச செயலகங்கள் ஊடாக நேற்றைய தினம் இலங்கை சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட பிரதான அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனின் பிரதிநிதிகளினால் குறித்த நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

கடந்த சில காலப் பகுதிகளில் நிலவிய கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற அங்கஜன் இராமநாதனின் சிபாரிசின் அடிப்படையில் தற்பொழுது நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

SHARE