1000 ரூபா வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

68

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டு மஸ்கெலியா மற்றும் பெரிய நடுதோட்ட பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் முதலாம் திகதி காலை 8 மணியளவில் மஸ்கெலியா எரிபொருள் நிலையம் முன்பாக கூட்டு ஒப்பந்தத்தில் அடிப்படை சம்பளம் 1000 ரூபா வழங்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தமது கருத்தை முன்வைத்த போது கூட்டு ஒப்பந்தம் தற்போது செல்லு படியற்றதாக உள்ளது எனவும் ஜனாதிபதியின் அதிரடி அரச மாற்றம் ஏற்பட்டதால் தற்போதைய நிலையில் இலங்கை தேசிய தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் கையொப்பம் இட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

1000 ரூபா சம்பளம் பெற்று தருவதாக கூறியவர்கள் தற்போது அமைச்சர்கள் ஆகிவிட்டனர்.கடந்த மாதம் 30ஆம் திகதிக்கு முன்பாக 1000ரூபா பெற்று தராவிடின் பதவி விலகுவேன் என கூறியவர்கள் தற்போது என்ன செய்ய போகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

முதலாம் திகதி நடைபெறயிருக்கும் பேச்சு வார்த்தையில் 1000ரூபா பெற்று தந்தால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானுக்கு மாலை அணிவித்து அவருடன் இணைந்து ஆட்சி நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.

SHARE