கோடி மதிப்பிலான வைர மாலை….நகைகள் திருமணத்துக்கு தயாரான பிரியங்கா சோப்ரா

61

பிரியங்கா சோப்ராவுக்கும் புகழ்பெற்ற அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசும் டிசம்பர் மாதம் ஜோத்பூரில் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர்.

திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் குடியேற பிரியங்கா சோப்ரா முடிவு செய்துள்ளார்.

இதற்காக அங்கு பெரும் கோடீஸ்வரர்கள் வசிக்கும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ரூ.48 கோடிக்கு புதிய வீடு ஒன்றை வாங்கி உள்ளனர்.

திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் தற்போது தொடங்கி உள்ளன. அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சிகள் தடபுடலாக நடக்கின்றன.

திருமணத்துக்காக பிரத்யேகமான ரூ.7.5 கோடி மதிப்புள்ள வைர மாலையையும், ரூ.2.1 கோடி மதிப்புள்ள மோதிரத்தையும் பிரியங்கா சோப்ரா வாங்கி இருக்கிறார்.

அவற்றை தற்போது அணிந்து வருகிறார். திருமணத்துக்கு வாங்கிய ஆடைகளையும் சேர்த்தால் மொத்த செலவு ரூ.10 கோடிக்கும் அதிகமாக வரும் என கூறப்படுகிறது.

SHARE