துடுப்பாட்டத் திறமையை வெளிப்படுத்திய இளம் வீரர் – பிரியான்ஷு மோலியா

64

இந்தியாவின் பரோடாவைச் சேர்ந்த 14 வயது இளம் வீரரான பிரியான்ஷு மோலியா ஒரே இன்னிங்சில் 556 ஓட்டங்கள் குவித்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து திகைக்கவைக்கும் துடுப்பாட்டத் திறமையை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.

319 பந்துகளில் 98 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 556 ஓட்டங்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார் மோலியா.

மொஹீந்தர் அமர்நாத் கிரிக்கெட் அகாடெமிக்காக ஆடிய மோலியாவின் இந்த இன்னிங்சினால் அந்த அணி 826/4 என்ற இமாலய ரன் எண்ணிக்கையை எட்டியது.

தன் இன்னிங்ஸ் குறித்து மோலியா கூறும்போது, “என்னுடைய முந்தைய உயர்ந்தபட்ச ஸ்கோர் 254, நல்ல இன்னிங்ஸ்தான் பந்து வீச்சு நன்றாக இருந்தது 4,5 முறை பீட்டன் ஆனேன். 100, 100 ஓட்டங்களாக இலக்கு நிர்ணயித்து ஆடினேன்” என்றார்.

மேலும் தன் ஆஃப் ஸ்பின் பவுலிங்கில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் பிரியான்ஷு மோலியா.

SHARE