மொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி

கூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் ஜிமெயில் அப்பிளிக்கேஷன்களுக்கான புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்கின்றது.

இவ் வசதியின் ஊடாக ஒன்றிற்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளுக்கு வரும் மின்னஞ்சல்கள் அனைத்தையும் ஒரே இன்பாக்ஸில் பார்வையிட முடியும்.

எனினும் இவ் வசதியானது முதன் முறையாக iOS இயங்குதளத்தில் செயற்படும் மொபைல் சாதனங்களுக்காகவே அறிமுகம் செய்யப்படுகின்றது.

இவ் வசதியினைப் பெறுவதற்கு ஐடியூன்ஸ் சென்று ஜிமெயிலின் புதிய பதிப்பினை அப்டேட் செய்ய வேண்டும்.

எவ்வாறெனினும் இப் புதிய வசதியினால் ஒரு மின்னஞ்சல் முகவரியில் உள்ள தகவல்கள் ஏனைய மின்னஞ்சல் முகவரிகளுடன் பகிரப்படும் என பயனர்கள் அஞ்சத்தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அன்ரோயிட் சாதனங்களில் இவ் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிகிறது.

About Thinappuyal News