அண்மைக்கால அரசியல் மாற்றம் ஜனநாயக படுகொலையாகும் – சிவாகரன்  

42
மன்னார் நகர் நிருபர் 
அண்மையில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம் என்பது ஒரு ஜனநாயக படுகொலை என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் சிவாகரன் தெரிவித்துள்ளார்.
பின்கதவால் ஆட்சியை அமைத்து கொண்ட நல்லாட்சி எனும் ஆட்சிக்கு தலைவராக
இருந்த மைத்ரி பால சிறிசேனவின் மாபெரும் துரோக செயலாகும்.
இந்த துரோக தனதுக்கு பின்னியில் உலக நாடுகளின் அனுசரணை இருந்திருக்க கூடிய வாய்ப்புக்கள் உண்டு குறிப்பாக சீன அல்லது இந்தியாவின் அனுசரணையில் தான் இவ்வாறான குறுக்குவாளியான ஆட்சிமாற்றம் நடந்திருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு.
இந்த வாய்ப்பை தமிழர் தரப்பு சரியாக பயன்படுத்துகின்ற போக்கும் காணக்கூடியதாக இல்லை எனவும் தெரித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களின் இருப்பியலின் அடிப்படையில் அரசியலை தக்கவைக்க கூடிய சூழல்நிலைக்கு ஏற்றவகையில் தமிழர்களுக்கு கிடைக்க கூடுடிய வரப்பிரசாத சூழ்நிலைகளுக்கு  அமைவாகும் பேரம் பேசக்கூடிய  ஒரு சக்தியாகவும் எழுத்து முழ
ஒப்பந்தத்தின் பிராரம் ஆதரவளிக்க கூடிய நிலைப்பாட்டுக்கு வர வேண்டியவர்களாக இருக்கவேண்டும் ஆனால் அவ்வாறான நிலைமை அவர்கள் பேச்சுவார்த்தை தளத்தில் தெரிவதாக எங்களுக்கு தெரியவில்லை.
இந்த நாட்டிலே ஜனநாயகம் இல்லை என்பதுக்கு சட்டதுறையும் நீதிதுறையும் நிர்வாக துறையும் ஒன்றை ஒன்று தங்களுடைய பதவிகளை தக்கவைத்துக்கொள்வதற்காக சட்டமா அதிபர் தன்னால் கருத்துக்கள் கூற முடியாது என்று சொல்வதும் ஏனைய அதிகாரிகள் மெளனம் காப்பதும் கேலிக்குரியதும் அநாகரிகமான ஒரு செயற்பாடாகவுமே பார்க்க கூடியதாக உள்ளது.
 ஆகவே இந்த ஜனநாயக படு கொலைக்கு விரைவில் முடிவு கட்டி ஜனநாயக ரீதியான அரசை தொடர்ந்து இலங்கையிலே செயற்படுத்துவதற்கான வழிவகையை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும்.
ஒரு நல்லாட்சி என்கின்ற அரசு சர்வாதிகார போக்கில் இருந்த ராஜபக்க்ஷவை நீக்கி வந்த அரசு அதே சர்வாதிகார போக்கில் அந்த ஆட்சியை ராஜபக்ஷவிடம் கொடுத்தது எதை எதிர் பார்த்து தமிழ் மக்கள் வாக்களித்தார்கலேஅதற்க்கு மாறாக ஒரு இன படுகொலையாளனை மீண்டும் ஆட்சி பீடம் ஏற்றுவதற்க்கு தமிழ் மக்களின் வாக்குக்கள் உபயோகிக்கப்பட்டிருக்கின்றது.
 அதற்க்கு தீர்க்கதரிசனம் அற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் அன்றைய நிபந்தனை அற்ற ஆதரவும் இன்றைய செயற்பாடுகளும் வெட்ககேடானவையாகவே  உள்ளது.
SHARE