இலங்கையில் சதிப்புரட்சியை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தூக்கிலிடப்படவேண்டியவர்..!

40

 

ஜனநாயகத்தை மீறி இலங்கையில் சதிப்புரட்சியை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தூக்கிலிடப்படவேண்டியவர்.


ஒரு நாட்டின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவேண்டிய ஜனாதிபதி அவர்களே தமது சுய நல அரசியலுக்காகவும், தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை வழங்கக் கூடாது என்பதற்காகவும் இவ்வாறான செயற்பாட்டில் களமிறங்கியிருப்பதானது 19வது திருத்தச்சட்டத்தின் கீழ் ஜனாதிபதி அவர்கள் பாரிய குற்றம் விளைவித்துள்ளார்.

வடகிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி தான் உயிரோடு இருக்கும் வரை வழங்கப்போவது இல்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன அவர்கள் வெளிப்படையாகக் கூறியிருந்தார். அவ்வாறு இல்லையென்றால் என்னைக் கொலை செய்யவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்ததன் உள்நோக்கம் எந்த அரசாங்கங்கள் மாறி மாறி வந்தாலும் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை வழங்கக் கூடாது என்பதே ஆகும்.

நிபந்தனை அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவர்களை நம்பி எவ்வாறு வாக்களிப்பது கட்சிக் கூட்டத்தில் இனவாதக் கருத்துக்களை தெரிவிப்பதன் ஊடாக நாட்டில் வன்முறைகளை தூண்டிவிடும் ஒரு நபராகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது முகபாவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சமஷ்டி தீர்வுக்கா தமிழினம் போராடி உயிர்கொடுத்த விலை ஏறாலம். ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களைக் கொன்றொழித்த மஹிந்தராஜபக்ஷாவுக்கு மீண்டும் பிரதமர் பதவி வழங்கியிருப்பது என்பது நல்லாட்சி அரசாங்கத்தின் துரோகச் செயலாகும்.

இத்தகைய குறுகிய மனப்பாங்குகளில் இருந்து சிங்கள இனவாத அமைப்புக்கள் விடுதலை பெறும்வரை தமிழினமும் சிங்கள இனமும் சேர்ந்து வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. மைத்திரிபால சிறிசேன அவர்களுடைய நடவடிக்கைகள் அனைத்தும் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை குழிதோண்டிப் புதைக்கும் ஒரு செயற்பாடாகவே காணப்படுகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் ஒரு போராட்டத்தை தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கும் ஒரு செயற்றிட்டத்தையே தற்பொழுது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வகுத்து வருகின்றார்.

இதனொரு கட்டமாகத்தான் தற்பொழுது நடைபெறுகின்ற அரசியல் முன்நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பற்றாக்குறைக்கு தமிழ் அரசியல் தலைகளையும் முஸ்லீம் அரசியல் தலைமைகளையும் விலைக்கு வாங்கும் தந்துரோபயமாக கோடிக்கணக்கில் பணங்களைக் கொடுத்து தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டங்களை வழங்காது ஏமாற்றும் நடவடிக்கைகளாகவும் இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி வில்லியகோபல தொடக்கம் மைத்திரிபால சிறிசேன வரை ஆட்சி செய்த ஏழு ஆட்சியாளர்களும் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை வழங்குவதற்கு முன்வரவில்லை. வழங்குவது போன்று ஒரு மாயத்தோற்றத்தையே அவர்கள் மேற்கொண்டு வந்தனர்.

இதனால் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அரசாங்கத்திற்கு எதிராக இறுதிவரை போர் தொடுத்தனர். இதனையே இவர்கள் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி தமிழ் மக்களின் விடுதலைக்காக களமாடிய வீர மறவர்களின் ஆயுதப்போராட்டத்தை மௌனிக்கச் செய்தனர்.

குறிப்பாக மஹிந்த அரசாங்கத்தின் பொழுதும் அதற்கு முற்பட்ட அரசாங்கத்தின் பொழுதும் அரசாங்க கைக்கூலிகளாகச் செயற்பட்ட ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், ஈபிடிபி ஆகியோரை மஹிந்தராஜபக்ஷாவை பிரதமராக்குவதற்கு ஆதரவு கேட்டிருக்கின்றார்கள்.

அடுத்ததாக முஸ்லிம் அரசியல் வாதிகள். இவர்கள் மாறி மாறி வருகின்ற எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவர்களுடன் கைகோத்து செயற்படுவது தான் இவர்களின் வழமையான தொழில். இவர்களை இலகுவில் அரசாங்கம் விலைக்கு வாங்கிவிடும்.

மைத்திரிபால சிறிசேனவினுடைய மற்றுமொரு நகர்வாக தமிழ் மக்கள் மீதான் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை மூடி மறைப்பதேயாகும். தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை நடந்தமைக்கான அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. குறிப்பாக ஆட்சி மாற்றம் ஒன்றைக் கொண்டு வந்த மைத்திரிபால சிறிசேன அவர்களும் மஹிந்தராஜபக்ஷா அவர்களும் தமிழினத்தின் கூடுதல் துரோகிகளாக்கப்பட்டுள்ளனர்.

‘செய் அல்லது செத்துமடி’ என்ற தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தாரக மந்திரத்திற்கு அமைய தமிழினம் செயற்படவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது எனலாம்.

 

SHARE