துளிர் உதவும் கரங்கள் அமைப்பினால் மாணவர்களுக்கனா கல்வி உபகரணங்கள் வழங்கி வைப்பு

68
(மன்னார் நகர் நிருபர்)
மன்னார் மாவட்டம் மடு கல்விவலயம் அடம்பன் RCTMS பாடசாலையில் கல்வி பயிலும் தாய்,தந்தையரை இழந்த ,மிகவும் கஸ்டத்தில் வாழும் மாணவ ,மாணவியர்கள் தெரிவின் அடிப்படையில் 17 பேருக்கு எதிர் வருகின்ற புதிய கல்வியாண்டுக்காண கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட  மாணவர்களை உள்ளடக்கிய குறித்த பாடசாலையில் தேவை அதிகம் உள்ள மாணவர்களை தெரிவு செய்து வருகின்ற வருடங்களில் கல்வி செலவினை ஒரு அளவேனும் குறைக்கும் நோக்கிகள் குறித்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் துளிர் உதவும் கரங்கள் தலைவர் திரு.மனோ கிரிதரன், பொருளாளர் திரு.ரொக்சன்,
உறுப்பினர் செல்வி.விமலினி, திரு.ஜீவன், பாடசாலை அதிபர் திரு.மரிய தாஸ் அவர்கள்.
யதீஸ் அறக்கட்டளை திரு .யதீஸ் அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ,மாணவர்கள் என பலரும்  கலந்து கொண்டனர்.
துளிர் உதவுங்கரங்கள் மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து கஸ்டத்தில் உதவியற்ற மாணவர்களுக்கு கல்வி செயற்பாட்டில் பல்வேறு உதவிகளை செய்து வருவதுடன் தனது இரண்டாம் ஆண்டில் காலடி வைத்து செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
SHARE