அஜித் நடிக்கும் புதிய படத்தில் பாடல் இல்லை

57

தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்துவருகிறார். அந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

அதன் பிறகு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.

இந்த படம் ஹிந்தியில் ஹிட் ஆன பிங்க் படத்தின் ரீமேக் என்றும், மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பிங்க் படத்தில் ஒரு பாடல் கூட இல்லை, அதன் தமிழ் ரீமேக்கில் பாடல் இணைக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தமிழ் ரசிகர்களுக்கு தகுந்தபடி சில மாற்றங்கள் செய்து பாடல்கள் சேர்க்கப்படலாம் என்றே சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

SHARE